மாற்றம்

மாற்றம்

By: Saipriya V

மவுனத்தை சுமக்கும் மரங்களாய் நின்றது போதும்

காற்றை கிழிக்கும் கழுகாய் ஆவோம்!

 

கவிஞர்கள் கையில் கவிதைகளாய் இருந்தது போதும்

காலத்தை மாற்றும் கருவியாய் ஆவோம்!

 

மழையில் தொலைத்த கண்ணீர் துளி போல்,

வருங்காலம் தொலைத்த அவலம் போதும்!

 

இனி வடிவமைப்போம் நம் வாழ்கையை

சிற்பியும் நாமே ! சிற்பமும் நாமே!